இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி ஏ24 | Samsung Galaxy A24 specs leaked

2022-11-08 51

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy A24 எனும் போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ24 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும்.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ24 போன் அறிமுகமாகும்.
48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன்.
கேலக்ஸி ஏ24 போன் ஆனது எக்ஸிநோஸ் 7904 சிப்செட் வசதியுடன் வெளிவரும்.
4000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.